சனி, 7 ஜனவரி, 2012

இலங்கையில் இஸ்லாம்


இலங்கையில் இஸ்லாம் பரவியமை பற்றியும், இலங்கை முஸ்லிம்கலளின் ஆரம்பகால வரலாறு பற்றியும் அறிவதற்குத் துனணயாகக் கூடிய ஆதார நூல்கள் மிகக் குறைவாகவவே உள்ளன. மிக அண்மைகாலம் வ்ரை இலங்கை முஸ்லிம்கள் தம் வரலாறு பற்றி அறியக்கூடிய தகவல்களைப் போதியளவு விட்டுச்செல்லவில்லை. இதனால் அரபுப் பிர்யாணிகளின் குறிப்புகள், சிங்கள இலக்கியங்கள், ஐரோப்பிய ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற தகவல்கள் என்பன கொண்டே இலங்கை முஸ்லிம்களின் வறலாற்றைக் கட்டி எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பகால முஸ்லிம்களின் வரலாற்றை அறிய அறபுப் பிரயாணிகள் விட்டுச்சென்ற குறிப்புக்களே பெரிதும் உதவுகின்றன.



இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் முதன் முதல் எப்போது எவ்வாறு நிகழ்வுற்றது என்பதனை சரியாகக் கணித்துக் கூற முடியாத போதிலும் இலங்கையில் இஸ்லாத்தின் பரவலுக்கு வழிகோலிய அறேபியர் கிறுஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதல் இலங்கையுடன் வர்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.


மூன்று புறத்திலும் நீண்ட கடற்கரையோரங்களைக் கொண்டிருந்த அறேபியா தனது மேற்கெல்லையில் நாகரிக
வளர்ச்சியும் பொருளாதார வளமும் கொண்டிருந்த எகிப்துடனும், கிழகெல்லையில் பல்வேறு துறைகளிலும்
நன்கு வளர்ச்சி கண்டிருந்த பாரசீகத்துடனும் வர்தகத்தொடர்பைக் கொண்டிருந்தது. பாரசீகத்துடனான
வர்தகத் தொடர்பு கடற்பாதை மூலமே நடைபெற்றது. ஏடன் துறைமுகத்தூடாகவும், பாரசீகத்தின்  கரை
யோரமாகவும் அவர்கள் கொண்டிருந்த வர்தகத் தொடர்பு இந்தியாவுக்கு அவர்கள் செல்லவும் வழிகோலியது.
மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் இந்தோனேசியா வரை சென்ற கிழகாசிய நாடுகளுக்குமிடையிலான வர்தகப் பாதயை அவர்கள் இணைப்பவர்களாக இருந்தனர். இப்பாதையின் மத்தியில் இலங்கை அமைந்திருந்ததால் இஸ்லாத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே அறேபிய வர்தகர் இலங்கையுடன் தொடர்புகொண்டிருந்தனர்.


கிரேக்கர் இந்தியாயை அறிவதற்கு முன்னர் அறேபியர் இந்தியாவுடன் தொடர்புகொண்டிருந்தனர். பருவப் பெயர்ச்சிக் காற்றைப் பயன்படுத்தி இந்து சமுத்திரத்தில் பிரயாணம் செய்தனர். கி.பி 4ஆம் நூற்றாண்டில் பின் உரோமப்  பேரரசு வீழ்ச்சியடைந்தாலும், இந்தியர் கடல் கடந்த வர்தகத்தில் அப்போது ஆர்வம் காட்டாததாலும் அறேபியரும் பாரசீகரும் இந்தியாவுடனான வர்த்தகத்தில் பெருமளவில் ஈடுபட்டனர். இதனால் கி.பி.4ம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் சூரத், மங்களூர், கள்ளிக்கோட்டை முதலாம் மலபார் நகர்களிலும் மஃபர் கரையோரங்களிலும் தமது  வர்த்கத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். இப்பிரதேசங்களிலிருந்து அறேபியர் இலங்கைக்கும் வந்து போகலாயினர். சீனயாத்திரியான பாஹியன் கி.பி 414இல் இலங்கையில் அறேபிய வர்தகர்களை சந்தித்தமை இஸ்லாத்தின் தோற்றத்துக்கு முன்பே அறேபியர் இலங்கையுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை புலப்படுத்துகின்றது.


 இஸ்லாத்தை போதித்தவரான முஹம்மது (ஸல்) அவர்களின் தலைமையில் வரலாற்றில் முதன் முறையாக அறேபிய ஐக்கியப்பட்டது. அவர்களின் பின் ஆட்சி பீடாமேரிய அல்குலபா உர்ராசிதூங்க்கள் காலத்தில் மேற்கே சிரியாவும் எகிப்தும், கிழக்கே ஈராக்கும் ஈரானும் முஸ்லிம்கள் வசமாகின. ஈரனியர்கள்  இஸ்லாத்தை ஏற்றதோடு அறபு மொழியையும் பேசலாயினர். இதனால் அவர்களும் ஏனையோரால் அறேபியர் என்றே அழைக்கப்பட்டனர்.


முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கம் கி.பி 8ம் நூற்றாண்டு முதல் வளர்ச்சியடைந்ததால் இந்து சமுத்திரத்தில் செல்லும் தமது வர்த்தகக் கப்பல்களுக்கு அவர்களால் பாதுகாப்பு வழங்க முடிந்தது. இப்பின்னணி இந்து சமுத்திர நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் அரேபியர் வசமாக உதவியது. அவர்கள் தம் நலனைக் கருதித் தாம் வர்த்தகம் செய்த கீழைத்தேய நாடுகளில் சிறு சிறு குடியேற்றங்களை ஏற்படுத்த்க் கொண்டனர். சீனாவின் கண்டன் துறைமுகத்திலும்க.பி.8ம் நூற்றாண்டில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமளவு செல்வாக்குடைய அரபுக் குடியேற்றம் ஒன்றிருந்தது. இக்காலப் பகுதியில் இலங்கையிலும் சிறு வர்த்தகக் குடியேற்றங்கள் இருந்தன என்பதை நிரூபிக்க கீழ்வரும் ஆதாரங்கள் துணைபுரிகின்றன.



இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை வழங்க முயற்சித்த முஸ்லிம் நேசன் தனது 1898.10.22ஆம் இதழில், ஹுசைன் இப்னு முஹம்மது என்பவர் கோவை செய்த அல்கியாபாகறி  எனும் நூலின் முதலாம் பாகத்தின் 184ஆம் பக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகப் பின்வரும் செய்தியைத் தந்துள்ளது. ஹிஜ்ரி 6ஆம் வருடத்துக்கு சரியான கி.பி 628ஆம் ஆண்டில் வஹ்ப் இப்னு அபிஹப்சா எனும் பெயருடைய ஓர் அஸ்ஹாபியை நபிகளார் இலங்கை அரசனிடத்தில் அனுப்பியதாகவும் அவர் நபிகளாரின் கடிதத்தை இலங்கை மன்னனிடம் கொடுத்ததாகவும், அதில்  அம்மன்னனுக்கு இஸ்லாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிரிந்ததாகவும், அதனால் அவ்வஸ்ஹாபிக்கு மார்க்கத்தை பரப்புவதற்கு அனுமதியளித்து பள்ளி ஒன்றைக்கட்டவும் விரும்பியோர் அம்மதத்தை ஏற்கவும் சுயாதீனம் கொடுத்தார். அவர் ஏற்கனவே இங்கிருந்த அறேபியருக்கும் பிறருக்கும் உபதேசித்து சிலரை தம்மதத்தவராக்கி ஹிஜ்ரி 10இல் அறேபியாவுக்கு சென்றார்.


 முஹம்மது(ஸல்) அவர்கள் வஹ்ப் இப்னு அபீ ஹப்ஸா மூலம் சீன மன்னனுக்குக் கொடுத்தனுப்பிய கடிதம் தொடர்பாக பேராசிரியர் தோமஸ் ஆர்னல்ட் தனது The Preaching of Islaam எனும் நூலில் குற்ப்பிட்டுள்ளார். முஸ்லிம் நேசனும் ஆர்னல்டும் குறிப்பிடுகின்ற தூதுவர்களின் பெயர் ஒன்றாக ஈருப்பதும், சீனாவுக்குச் செல்லும் அரேபியர் கடல்மார்க்கமாகச் செல்லும்போது இலங்கையூடாகவே செல்லவேண்டும் என்பதும், செல்லும் வழியில் கப்பல்கள் முக்கிய துறைமுக நகர்களில் தங்கிச் செல்வது வழக்கமாக இருந்ததும், சீனாவரை சென்ற தூதுவர்கள் இலங்கை மன்னரைத் தரிசித்துக் கடிதங்களை வழங்குவது சாத்தியமே என்று கருதுவதில் தவறில்லை. நபித் தோழர்களான தமீம் அல் அன்ஸாரி, உக்காஸா போன்றோரின் அடக்கஸ்தலங்கள் தென்னிந்தியாவில் கோவளத்திலும் பறங்கிப்பேட்டையிலும்காணப்படுகின்றன. ஈவை சீனாவரை சென்ற வணிகப் பாதையிலிருக்கின்ற இலங்கை போன்ற இடங்களில் 7ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் குடியிருந்தார்கள் என்பதை உணர்த்தப் போதுமானவையாகும்.



கி.பி 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஷஹ்ரயார் அஜாஇபுல் ஹிந்து எனும் நூலில் எழுதியுள்ள பின்வரும் செய்தி நோக்கத்தக்கது. " இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி கேள்விப்பட்ட இலங்கையர் தம்மில் இருந்துதிர்மைமிக்க ஒருயரைத் தெரிவு இறைத்தூதர் பற்றிய உண்மைச் செய்திகளை அறிந்து  வருவதற்கு  அறேபியாவுக்கு அனுப்பி வைத்தனர்.அத்தூதுவர் மக்காவை அடையும் பொழுது முஹம்மது (ஸல்) அவர்களும் முதலாம் கலீபாஅபூ பக்கர் (றழி) அவர்களும் காலஞ்சென்று இரண்டாம் கலீபா உமர் (றழி) (க்கி.பி 634-644) ஆட்சி செய்து  கொண்டிருந்தார். இறைத்தூதர் பற்றிய செய்திகளை அவரிடம் இருந்து அறிந்து மீண்டும்வரும்போது இன்றைய பாகிஸ்தானில் உள்ள மக்ரான் கரையில் அத்தூதர் காலமானார். அவருடன் வந்த பணியாலள் இலங்கையை அடைந்து இஸ்லாம் பற்றிய செய்திகளை வழங்கினார். அவர் கூறிய செய்திகளும் ஏற்படுத்திய
நலெண்ணமும் இலங்கையில் முஸ்லிம்கள் வரவேற்கப்படுவதற்கு பெரிதும் உதவின. அறேபியர் வர்த்தகர் என்ற தோர்ணையில் ல்  மட்டுமன்றி முஸ்லிம்கள் என்ற் நிலையிலும் வரவேற்கப்படுவதற்கும் குடியேறுவதற்கும் அது உதவியது எனலாம்.



இலங்கை வந்த அறேபியர் மீண்டும் தாம் செல்ல வேண்டிய திசைக்கு செல்வதற்குத் துணையாகக் கூடிய காற்று வீசும் வரை இங்கு தங்க வேண்டியேற்பட்டது. மேலும் தமக்குத் தேவையான திரவியங்களை உள்நாட்டில் இருந்து திரட்டிக்கொள்வதற்கும், கொண்டுவந்த வர்த்தகப் பொருட்களைஉள் நாட்டில் வி நியோகிப்பதற்கும் அரபு முஸ்லீம் வர்த்தகர்களில் சிலர் இங்கு தங்கினர். இவ்வாறு தற்காலிகமாகத் தங்கும் காலத்தில் கடலோடித் திரவியம் தேடும் வர்த்தகர்கள் துறைமுக நகர்களில் வாழ்ந்த பெண்களை விவாகம் புரியும் வழக்கம் இருந்தது. இஸ்லாம் விபசாரத்தைத் தடை செய்து பலதார மணத்தை அங்கீகரித்திருந்ததால் இங்கு வந்த அரேபிய வர்த்தகர்கள் இஸ்லாத்தை ஏற்ற சுதேசப் பெண்களை திருமணம் செய்தனர். இந்த மரபும் நம் நாட்டில் முஸ்லிம் சமூகமொன்று தோன்றத் துணை செய்தது எனலாம்.


"இலங்கை முஸ்லிம்களின் முன்னோர்கள் பற்றிக் குறிப்பிடும்போது, இலங்கையின் ஆரம்பகால முஸ்லிம் க்குடீயேற்றவாசிகள் அரேபியரே என்றாலுமெண்ணிக்கையில் அவர்கள் மிகச் சிலரே" என பேராசிரியர் K.W. குணவர்தன  குறிப்பிடுகிறார். "இலங்கையின் ஆரம்பகாலக் சிற்றளவான அரபு வர்த்தகக் குடியேற்றங்களில் ஆண்களே அதிகமாக இருந்துருப்பர்" என்றும் அவர்கள் தம்மோடு தொடர்புடைய சிங்களப் பெண்களை விவாகம் செய்திருபர்" என்றும்  S. அரசரத்தினம் குறிப்பிடுகிறார். இக்கூற்றுக்கள், ஆரம்பகால முஸ்லிம் குடியேற்றங்கள் ஐயத்துக்கிடமின்றி அரபு ஆண்களைக்கொண்டே உருவாகின என்பதை நிறுவுகின்றன.


இஃதன்றி அரேபியப் பெண்களை விவாகம் புரிந்த அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் சிலரும் நம் நாட்டில் குடியேறியிருந்தனர். உமையாக் கலீபாக்களான அப்துல் மலிக் (685 - 705), வலீய்த் (705 - 715) ஆகிய இருவரது ஆட்சிக்காலங்களிலும் இராக்கின் கவர்னராகக் கடமையாற்றிய ஹஜ்ஜாஜின் கொடுமைக்கு அஞ்சி, உமையாக்களின் அரசியல் எதிரியான ஹாஷிமிக்களில் சிலர் இலங்கயில் குடியேறினர் என்ற மரபு வழிச் செய்தியொன்றை அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் குறிப்பிடுகின்றார். அரபு ஆட்சியாளர்களின் கெடுபிடிகளுக்கஞ்சி அரேபியர் வேளியேறிய சந்தர்ப்பங்கள் பலவற்றை வரலாற்றில் காணமுடியும். அத்தகையோர் சிலரிந்தியாவில் குடியேறியமை பற்றி, "முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம்" எனும் நூலில் ஹபீஸ் எம். கே. ஸெய்யது அஹமது குறிப்பிடும் பின்வரும் தகவலும் நோக்கத்தக்கது."ஆண், பெண் இருபாலாரையும் உள்ளடக்கிய 224 எகிப்தியர்கள் கி,பி. 875ல் காயல்பட்டணத்தில் குடியேறினர். அதே ஆண்டில் பாண்டிய மன்னன் அவர்களுக்கு வழங்கிய செப்புப் பட்டயமொன்று சென்னை நூதனசாலையில் உள்ளது." இநநிகழ்ச்சி, கீழைத்தேய வர்த்தகப் பாதையின் மத்தியில் அமைந்திருக்கும் இலங்கையில், அரேபியர் குடியேறினர் என்ற மரபு வழிச் செய்தியை உறுதிப்படுத்தத் துணை செய்கின்றது.


இலங்கை மன்னன் 2ம் தாதோபதிஸ்ஸ காலம் சென்ற அரபு வர்த்தகர்கள் சிலரின் விதவைகளையும் பெண்மக்களையும் 8ம் நூற்றாண்டின் முதலாம் தசாப்தத்தில் அரேபியாவுக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் பிரயாணம் செய்த கப்பலை "தேபல்" துறைமுகத்துக்கு அருகே கடற்க்கொள்ளைக்காரரள் கொள்ளையடித்து அரபுப் பெண்களையும் பணயம் வைத்துக்கொண்டனர். இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட இப்பெண்கள், இந்த நாட்டின் சுதேசப் பெண்களெனில், தம் தந்தையர்களை அன்றேல் தம் கணவன்மாரை இழந்த நிலையில் தமக்குப் பரிச்சயமும் இல்லாத, வேற்று மொழி பேசும் தூரப் பிரதேசமொன்றிற்குச் செல்ல விரும்பியிருக்க மாட்டார்கள். மாறாகத் தமக்கு நங்கு பரிச்சயமான தாய் நாட்டுச் சூழழில் வாழவே விரும்பியிருப்பார்கள். அரேபீயாவுக்கு இவர்கள் அனுப்பப்பட்ட  இந்நிகழ்ச்சியானது அரேபியர் தமரபு மனவீகளோடு குட்பதிக்களாக லங்கையீல் கி.பி.8ம் நூற்றாண்டின் முதலாம்  தசாப்தத்திலிருந்து  வாழ்ந்துவந்துள்ளார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது.


வரலாற்றேடுகளில் பதியப்பட்டுள்ள ஈவ்வாறான தகவல்கள் மட்டுமன்றி இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்லறை நடுகற்கள் (TOMBS) , அரபு நாணயங்கள் என்பனவும் ஆரம்பகால முஸ்லிம்களின்வரலாற்றையும் அவர்களது குடியேற்றங்களையும் பற்றி அறிய உதவுகின்றன.


டச்சு - ஒல்லாந்து உத்தியோகத்தர் ஒருவர் 1787ல்கொழும்பில் கண்டெடுத்த கல்லறை நடுகல் கி.பி. 10ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்ததாகும். ஹிஜ்ரி 337. இது நடப்பட்டுள்ளது. பக்தாதிலிருந்து கொழும்புக்கு வந்து இஸ்லாமிய அழைப்புப் பணி புரிந்து, ஹிஜ்ரீ 317ல் இறையடி சேர்ந்த "காலித் இப்னு பகாயா"வின் ஞாபகார்த்தமாக இந்த நடுகல் அவரது அடக்கஸ்தலத்தின் மீது  நடப்பட்டது. 20ம் நூற்றாண்டின் முற்கூறுகளில் புளியந்தீவிலும் திருகோணமலையிலும் கண்டெடுக்கப்பட்ட கல்லறை நடுகற்கள் கி.பி. 10 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முஸ்லிம் குடியிருப்புக்கள் இலங்கையில் பரவலாக இருந்தன என்பதைய்ச் சந்தேகத்துக்கிடமின்றிக் காண்பிக்கின்றன.

கொழும்புக்கு அண்மையிலுள்ள முதுராஜவல எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையலில் கலீபாக்களான வலீத், ஹாரூன் காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 11 - 13 ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அரபு நாணயங்கள் நீர்கொழும்பு, வத்தளை, சப்ரகமுவ, கலகெதர முதலாம் இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை, அரேபியருக்கும் இலங்கையருக்குமிடையே நடைபெற்ற வர்த்தகத் தொடர்புகளை மட்டுமல்லாது அத்தொடர்புகள் ஏற்பட்ட காலப்பகுதி, முஸ்லிம் குடியேற்றங்கள் என்பன பற்றிய தகவல்களையும் பெற உதவுகின்றன.


கி.பி. 9ம், 10ம் நூற்றாண்டுகளில் அரபுக் கடற் பிரயாணிகள் விட்டுச் சென்றுள்ள தகவல்களின்படி அரபுக்கடலின் கிழக்குப் பிரதேச ஏற்றுமதி, இறக்குமதியின் மத்திய தள்மாக  மலையாளக் கரையிலுள்ள "கொல்லம்" எனும் துறைமுக நகர் அமைந்துருந்தது. அங்கிருந்த வர்த்தகர்கள் சுறு கப்பல்கள் மூலம் பாக்கு-நீரிணையூடாக வங்காளக் குடாவின் கரையோரப் பிரதேசங்க்களை அடைந்தனர். அன்றேல் கொல்லம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் தென் கரையோரமாகச் சென்று மலாயாவைக் கடந்து சீனாவை அடைந்தனர். இவ்விரு பாதைகளும் சென்ற இலங்கையின் கரையோர நகர்களில் முஸ்லிம் குடியிருப்புக்கள் தோன்றின. இவற்றுள் கொழும்பு, பேருவல, களுதர, காலி, வெலிகம, மாதற, திருகோண்மலை, மன்னார், புத்தளம் என்பன குறிப்பிடத்தக்கனவாகும். இவற்றை ஏற்படுத்த ஐரோப்பியரைப்போல் ஒருபோதும் முஸ்லிம்கள் ஆயுத பலத்தைப் பிரயோகிக்கவில்லை என்பது நோக்கத்தக்கது. சுதேச மன்னர்களதும் மக்களதும் ஆதரவுடனேயே அவை வளர்ந்தன.



அப்பாஸியரின் வீழ்ச்சியும் இந்திய முஸ்லிம்களுடனான உறவும்

அப்பாஸிய ஆட்சி கி.பி. 10ம் நூற்றாண்டின் பின்னர் படிப்படியாகச் ச்ல்வாக்கிழந்தது. இதனால் அரபு முஸ்லிம்களின், இலங்கையுடனான கலாசார ரீதியான தொடர்புகள் வெகுவாகக் குறைந்தன. ஆயினும் கி.பி.9ம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியக் கரையில் வாழ்ந்த முஸ்லிம் குடியேற்றங்களின் இலங்கையுடனான வர்த்தகக் கலாசாரத் தொடர்புகள் அதிகரித்தன. இதனால் தம் வர்த்தக, கலாசார நலங்களைப் பேணுவதற்காக அவர்களும் இலங்கையின் கரையோர நகர்களில் குடியேறலாயினர். அவர்களி. இலங்கையுடனான வர்த்தகத்தின் வளர்ச்சியும், இரு கரைகளுக்குமிடையிலான தூரத்தின் குறுக்கமும், இரு கரைகளதும் துறைமுக நகர்களில் முஸ்லிம்கள் செல்வாக்கோடு வாழ்ந்தமையும், இந்தியக் கரையில் இஸ்லாத்தை ஏற்போரின் தொகை அதிகரித்தமையும் இந்திய முஸ்லிமக்ளிலங்கையில் குடியேறத் துணை செய்தன.


இதுபற்றி சித்திலெப்பை பின்வருமாறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது.


"அரபிகள் இலங்கைக்கு வந்து காலி முதல் பேருவல வரையிலும் குடியிருந்து வியாபாரம் ச்ய்தார்கள். இப்படியிருக்கும்போது தென்னிந்தியாவிலிருக்கின்ற நாவூர், கரைக்கால், தொண்டி, காயல்பட்டணம் முதலியவூர்களில் இருந்தும் இஸ்லாமானவர்களும் வியாபாரம் செய்வதற்காக வந்து குடியேறினார்கள். பின்பு அந்த அரேபியர்களின் சந்ததிகளும் தெற்கேயிருந்து வந்தவர்களும் வித்தியாசமறியக் கூடாத விதமாகக் கலந்துவிட்டார்கள்."


இக்கூற்று அரேபியரின் சந்ததியினரும் தன் இந்திய முஸ்லிம்களின் சந்ததியினரும் இரண்டறக் கலந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வளர்ந்துள்ளது என்பதைக் காண்பிக்க்கின்றது. இதன்காரண்மாக 15ம் நூற்றாண்டளவில் இலங்கை முஸ்லிம் குடியேற்றம் தனி அரபுக் குடியேற்றம் எனும் பண்பை இழந்து, அரபு-இந்தியக் குடியேற்றம் எனும் தன்மையைப் பெற்றது.


போர்த்துக்கீஷர் நம் நாட்டுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையின் முக்கிய கரையோர நகர்களிலும்; குருனாகல், கம்பளை, ரத்னபுர முதலாம் உள்-நாட்டுப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் குடீயேறி வாழ்ந்துள்ளார்கள் என்பது நன்கு அறியப்பட்டுள்ளது.


1ம் பராக்கிரமபாகுவின் காலத்தில் (1153 - 1186) வெலிகமையில் வளம்படைத்த வர்த்தகர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தார்கள் என்று சூலவம்சம் குறிப்பிடுகிறது. இக்காலப்பகுதியில் முஸ்லிம்களின் கீழைத்தேய வர்த்தகம் சிறப்புற்று வளங்கியதாலும் இலங்கையின் தென்-கரையோரமாக சீனாவரை சென்ற வர்த்தகப் பாதையில்வெலிகம இருந்தமையாலும் சூலவம்சம் க்குறிப்பிடும் வர்த்தகர்கள் முஸ்லிம்களே என்று கருதுவதுதான் மிகப்பொருத்தமாக அமையும். 1470 - 71களில் 6ம் புவனேகபாகுவிற்கு எதிராக எழுந்த கிளர்ச்சித் தலைவர்களில் ஒருவர் வெலிகமையைச் சேர்ந்த முஸ்லிமாவார் என்ற கருத்தும் நிலவுகிறது. போர்த்துக்கீஷர் காலத்தில் வளம் மிக்க முஸ்லிம்களை வெலிகமையில் கொள்ளையடித்த சம்பவங்களும் உண்டு. இவை வெலிகமையில் முஸ்லிம் குடியேற்றங்கள் 12ம் நூற்றாண்டு முதல் இருந்து வந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.

இலங்கையின் தென்-முனையிலுள்ள துறைமுக நகராகிய காலியும் கப்பல்கள் தங்குமிடமாகப் புகழ் பெற்றிருந்தது. முஸ்லிம்கள் கீழைத்தேய வர்த்தகத்தில் பங்கு கொண்ட காலம் முதல் காலியுடன் தொடர்பு கொண்டிருப்பர். எனினும் முஸ்லிம்களின் ஆரம்பகால காலிக் குடியேற்றங்கள் பற்றிய தகவல்கள் கிடைப்பதில்லை. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இப்னுபதூதா காலியைத் தரிசித்த போது முஸ்லிம் குடியேற்றம்  ஒன்று அங்கிருந்தது என்பதை கப்பற் தலைவனான "நாகூதா இப்றாகிம்" என்பவர் அவருக்கு  விருந்தளித்து கௌரவித்தமை காட்டுகின்றது எனலாம். சீனக் கப்பற் தலைவன் செங்ஹோ கி.பி 1410இல் காலியில் விட்டுச்சென்றுள்ள சீனம், தமிழ், பாரசீகம் எனும் மும்மொழிகளிலான கல்வெட்டு, காலியில் முஸ்லிம் குடியேற்றம் பற்றிய சில தகவல்களைப் பெற உதவுகின்றது. 



முஸ்லிம்கள் இலங்கையில் முதன் முதல் குடியேறிய இடம் பேருவளை என்று கருதப்பட்டாலும் அக்கருத்தை நிறுவுவதற்குப்போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைப்பதாக இல்லை. எனினும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் முஸ்லிம்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றறிய முடிகிறது. ஹிஜ்ரி 331 (கி.பி 930) என்று திகதியிடப்பட்ட கல்லறை நடுகல் ஒன்று அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.பி 1010ல் பேருவளையில் வாழ்ந்த பெரியதம்பி முதலி மரைக்காயருக்கு இலங்கை மன்னன் ஒருவன் செம்பட்டயம் ஒன்றை வழங்கியுளான் என்று அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் குறித்துள்ளார். கி.பி 1350இல் ஜோன்டி மரிக் நொயிலி எனும் இத்தாலியக் கடற் பிரயாணி சீனாவில் இருந்துவரும் வழியில் புயலில் சிக்குண்டு பேருவளையை அடைந்தான். கோயாஜான் எனும் முஸ்லிம் அங்கு ஆதிக்கம் செலுத்தினான் என்றும், சட்ட பூர்வமான ஆட்சியாளனைப் புறக்கணிக்குமளவு செல்வமும் அதிகாரமும் உடையவனாக இருந்தான் என்றும் அவன் குறித்து சென்றுள்ளமை நோக்கத்தக்கது. கி.பி 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ' கோகில சந்தேச', 'கிரா சந்தேசய' எனும் இரு கவிதை நூல்களும் பேருவளையில் வாழ்ந்த சோனகப் பெண்கள் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்குறித்த கூற்றுக்கள் போர்த்துக்கீசர் இலங்கைக்கு வருமுன் பேருவளையில் கணிசமான ஒரு முஸ்லிம் குடியேற்றமிருந்தது என்பதைக் காட்டுகின்றன. பேருவலைக்கு அருகில் உள்ள அழுத்கம, மக்கூன், களுத்துறைப் பகுதிகளிலும், கொழும்பு, புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை முதலாம் இடங்களிலும் போர்த்துக்கீசர் வருகைக்கு முன்பு முஸ்லிம் குடியேற்றங்கள் பல இருந்தன என்றறிய முடிகிறது.


உள்-நாட்டுக் குடியேற்றங்கள்


14ம் நூற்றாண்டில் உள்-நாட்டிலும் முஸ்லிம் குடியேற்றங்கள் இருந்ததை வரலாறு காண்பிக்கின்றது. சுதேசிகளின் கலாசாரத்தில்
ருந்து முற்ற்லும் மாறுபட்ட கலாசாரத்தை முஸ்லிம்கள் பின்பற்ற்யமை அவரகளின் உள்-நாட்டுக் குடியேற்றத்துக்கு இடைஞ்சலாக ருந்த போதிலும் சுதேச மன்னர்களின் சினேகபூர்வமான அரவணைப்பு உள்-நாட்டுக்குடியேற்றத்துக்கு உதவியது. சிங்கள மன்னர்களின் தலை நகராக இருந்த குருனாகல் கம்பள முதலாம் நகர்களில் முஸ்லிம்கள் குடியேறியமை, மன்னர்களின் அரவணைப்பில் அவர்கள் குடியேறினார்கள் என்பதைக் காட்டுகின்றது.


முஸ்லிம்க்களது உள்-நாட்டுக் குடியேற்றத்தை நினைவூட்டும் இரு வரலாற்றுச் சம்பவங்கள் உள்ளன


குருனாகலைத் தலை-நகராகக்கொண்டு 1325 வரை ஆட்சி செய்த 2ம் புவனேகபாகு ""அஸ்வத்தும" எனும் கிராமத்தைச் சேர்ந்த "மதகெடிய குமாரி" எனப்பட்ட முஸ்லிம் பெண்ணைத்  திருமணம் செய்திருந்தான்.  "வஸ்துஹிமி" என்றழைக்கப்பட்ட அவளது மகன் முஸ்லிமாக வள்ர்ந்து ஆட்சிபீடம் ஏறுவதைச் சகியாத சிலர் அவனைக் கொலை செய்தனர். "கலேபண்டார ஔலியா" என அழக்கப்படும் அவனுக்காக அவன் கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு சமாதி கட்டப்பட்டுள்ளது. அவ்விடத்தின் பரிபாலனம் இன்றுவரை முஸ்லிம்கள் வசமே இருந்து வருகின்றது. 


1344ல் இலங்கை வந்த இப்னு பதூதா விட்டுச் சென்றுள்ள குறிப்புக்களும் குருனாகலில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் வாழ்ந்துள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. அங்கு சேகு உஸ்மான் ஷீராஸியின் பள்ளி இருந்ததாகவும் பாவாதமலையைத் தரிசிக்கச் செல்வோருக்கு அவரது மாணவர்கள் வழிகாட்டினார்கள் என்றும் குறித்துள்ளமை நோக்கத்தக்கது.


14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிங்கள ஆட்சியின் மத்திய தளமாக கம்பளை இருந்தமையால், இப்னு பதூதா குணாக்கர் எனக் குறித்துள்ள நகர் கம்பளையாகத்தான் இருக்கவேண்டும் என்று கருதும் வரலாற்றாசிரியர்களும் உள்ளனர். 1265 - 82 இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த நாணயம் ஒன்று கம்பளையில் கண்டெடுக்கப்பட்டுள்ளமையும், ஹிஜ்ரி 135 என்று குறிப்பிடப்பட்டுள்ள கல்லறை நடுகல் ஒன்று கம்பளைக்குச் சில மைல் தொலைவிலுள்ள ஹெம்மாதகமை எனும் கிராமத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளமையும்; கம்பளையில் 14ம் நூற்றாண்டளவில் முஸ்லிம் குடியேற்றமொன்று வாழ்ந்து வந்திருக்கிறது என ஊகிக்க இடமளிக்கின்றன. 


இலங்கையின் துறைமுக நகர்களில் குடியேறியிருந்த முஸ்லிம்கள் வர்த்தக வகுப்பினரால் பரிபாலிக்கப்பட்டதும், மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டதுமான ஒரு சமூகமாக வாழ்ந்தனர். முஸ்லிம் சமூகத்தின் தலைவராக இருந்தவர் அரசின் பிரதி-நிதியாக ஏற்கப்பட்டிருந்தார். துறைமுக நகரில் வாழ்ந்த அவர் சுங்க வரியை அறவிட்டதுடன் கப்பல் போக்குவரத்தையும் மேற்பார்வை செய்தார். பேருவலையில் கோயாஜானினதும் கொழும்பில் ஜலஸ்தியினதும் பணிகள் இதனையே நினைவுறுத்துகின்றன. இக்காலப்பிரிவில் நம் நாட்டில் நிலவிய அரசியல் சூழல் துறைமுக நகர்களில் இருந்த முஸ்லிம் சமூகம் சுயமாக இயங்க உதவியது எனலாம். வடக்கில் இருந்த ஆரியச் சக்கரவர்த்தியின் கெடுபிடிகள், தெற்கில் இருந்த சிங்கள அரசின் இயலாமை என்பன துறைமுக நகர்களில் முஸ்லிம்கள் தம் சொந்தப் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த  உதவியிருக்கும். அவர்கள் சிங்கள மன்னர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கும் கணிசமானதாகவே இருந்தது.
  
 NIE MODULE: ILANKAIYIL ISLAM








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக